×

பிளஸ் 2 தேர்வில் திருத்தணி அளவில் தளபதி கே.விநாயகம் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்

திருத்தணி: திருத்தணி அளவில் தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 72 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மாணவி பாவனா 575 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவிலும், திருத்தணி அளவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் பாவனா, பொருளியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதேபோல் மாணவி தனலட்சுமி 558 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடமும், மாணவி மதுஸ்ரீ – 545 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். இதுதவிர 20 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளை பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பள்ளி முதல்வர் விநாயகம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post பிளஸ் 2 தேர்வில் திருத்தணி அளவில் தளபதி கே.விநாயகம் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Thalapathy K. Vinayak Matriculation School ,Thiruthani ,Thalapathy ,K. Vinayak Matriculation Higher Secondary School ,Thalapathy K. Vinayagam Matriculation Higher Secondary School ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...